அகப்பொருள் துறை ஏதேனும் ஒன்று பற்றிப் பல கட்டளைக் கலித்துறைப்பாடல்களால் இயற்றப்படுவதொரு பிரபந்தம் இது. பொன்னாங்கால்அமிர்தகவிராயர் என்பார் ‘நாணிக்- கண் புதைத்தல்’ என்னும் அகப்பொருட்கிளவிபட, தளவாய் இரகுநாத சேதுபதியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 400கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஒரு துறைக்கோவை பாடியுள்ளார்.கவிராயர்காலம் 17ஆம் நூற்றாண்டு. அக்கோவையுள் 311-399 வரையுள்ள 89பாடல்கள் கிடைத்தில. ‘நாணிக் கண்புதைத்தல்’ என்னும் இத் துறைப்படவே,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘திராவிடக் கவிமணி’ முத்துசாமி ஐயர்என்னும் பெரும் புலவர் ‘திருவள்ளுவர் ஒருதுறைக்கோவை’ 133 பாடல்களால்பாடியுள்ளார். ‘நாணிப் புறங்காட்டல்’ ஒருதுறைக்கோவை 100 பாடல்களால்சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில், வரகவி மு.கணபதியாப்பிள்ளையவர்களால் இயற்றப்பட்டு அச்சிடப்பெற்று வெளியாகியது.மற்றும், வெறிவிலக்கல் – பாலனைப் பழித்தல் – முதலிய துறைப்படவும்19ஆம் நூற் றாண்டில் பாடப்பட்ட ஒரு துறைக்கோவைப் பிரபந்தங்கள் சிலவுள.பாடல் எண்ணிக்கை வரையறையின்றி இப்பிரபந்தம் அமைவதுபோலும்.மேற்போக்காக நோக்கின் ஒரு புறப்பொருள் துறையும், கூர்த்து நோக்கின்அகப்பொருட்கிளவி ஒன்றும் சிலேடை வகையால் தோன்றப் பாடல்கள் அமையும்இப்பிரபந்தம் பாடுதல் பெரும்புலமை வித்தகர்க்கே இயல்வதொன்று. ஆதலின்கோவைப் பிரபந்தம் பலவாகக் காணப்படுதல் போல, இவ்வொருதுறைக் கோவைப்பிரபந்தம் பல்கிக் காணப்படுவதில்லை.