ஒருசிறை நிலை

ஒரு பாட்டின் பொருள் ஒருவழியாக நிற்பது; யாப்பருங்கல விருத்தியுரை(பக். 393) கூறும் பொருள்கோள். சிங்கநோக்குத் தாப்பிசைப்பொருள்கோளிலும், தேரைப்பாய்த்துச் சுண்ண மொழிமாற்றுப் பொருள்கோளினும்,பாசிநீக்கமும் ஒருசிறை நிலையும் புனல்யாற்றுப் பொருள்கோளிலும்அடங்கும்.ஒருசிறை நிலையாவது ஒருபாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்பது (இறை. அ. 56. உரை)எ-டு : ‘கோடல் மலர்ந்து குரு(கு)இலை தோன்றின; கொன்றைசெம்பொன்பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த; பாழிவென்றஆடல் நெடுங்கொடித் தேரரி கேசரி அந்தண்பொன்னிநாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய நன்னுதலே!’கோடல் மலர்தல், குருக்கத்தி தளிர் ஈனல், கொன்றை பூத்தல் என்பனதலைவன்தேர் மீண்டு வருதலுக்குரிய கார்காலத் தைச் சுட்டுதலாகியஒரேபொருள் பற்றி அமைந்தமையின், இப் பாட்டிலுள்ள பொருள்கோள்ஒருசிறைநிலையாம். (இறை. அ. 56 உரை; யா. வி. பக். 393)