ஒரீஇத் தொடுத்தல்

பிறிதொன்றனை அவாவாமல் அறுத்துச் செய்வது. இஃது யாப்புப் போலப்பொருள் நோக்காது ஓசையைக் கோடலா னும் அடியிறந்து கோடலானும்யாப்பெனப்படாது.ஒரீஇத் தொடுத்தல் என்பது எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையால்தொடுத்தல் என்பாரும் உளர். செந் தொடையும் தொடையாகலான் அதுபொருந்தாது.எ-டு : ‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறநா. 235)இதன்கண், வேறொரு சொற்றொடரை எதிர்பாராமல் அந்த அடியிலேயே பொருள்நிரம்பியிருத்தல் காண்க. இஃது ஒரூஉ வண்ணத்தின் இலக்கணம். (தொ. செய்.227 நச்.)