ஒன்று முன்னர் உயிரும் யாவும் வந்து புணருமாறு

வருமொழி முதலில் உயிரோ, யா என்ற உயிர்மெய்யோ வரு மிடத்து,
நிலைமொழியாகிய ‘ஒன்று’என்பது ‘ஒரு’ என்று திரிந்த நிலையை நீக்கி ‘ஓர்’
என்றாகி,
ஓரகல், ஓராடு, ஓரிலை, ஓரீ, ஓருரல், ஓரூசல், ஓரெருது, ஓரேணி,
ஓரையம், ஓரொழுங்கு, ஓரோடம், ஓரௌவியம், ஓர்யானை – எனவரும். ஈரடை,
ஈர்யானை, மூவசை, மூயானை – எனச் செய்யுட்கண் வருதலும்
கொள்ளப்படும்.
(வருமொழி அஃறிணையாயவழியே இம்முடிபு கொள்க.)
ஒன்று முதலிய எண்ணுப்பெயர்கள் அஃறிணையாம். எண்ணியற் பெயரே
உயர்திணையாம். (தொ. எ. 479 நச். உரை)