ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்கள் நூறு என்ற நிலைமொழியொடு புணர்தல்

நூறு என்பது நூற்றொன்று நூற்றிரண்டு, நூற்றுமூன்று, நூற் றெட்டு,
நூற்றுப்பத்து, நூற்றுக்கோடி, நூற்றுத் தொண்ணூறு, நூற்றுக்குறை,
நூற்றிதழ்த் தாமரை, நூற்றுக்காணம், நூற்றுக் கால் மண்டபம்- என இனஒற்று
மிக்கு, வன்கணமாயின் வருமொழி வல்லெழுத்து மிக்குப் புணரும். (தொ. எ.
472. நச்.)
நூற்றொருபஃது, நூற்றிருபஃது, நூற்றெண்பது – என ஆண்டும் ஈற்றின்
இனஒற்று இடையே மிக்குப் புணரும். நூற்றுக்கலம், நூற்றுக்கழஞ்சு –
முதலாயினவும் அன்ன. (473, 474 நச்.)