ஒன்று +பஃது+ ஆன் + ஐ
ஒன்று என்பதனொடு பத்து என்பது புணர்ந்து ஒருபஃது என்றாகும்.
இவ்வாறே இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது (எழுபஃது) எண்பஃது
– என்பனவும் ஆம்.
ஒருபஃது முதலியன உருபுகளொடு புணரும்வழி, பஃது என்பதன்கண் உள்ள பகர
ஒற்று நீங்கலான ஏனைய கெட, ஆன்சாரியை பெற்று ஒருப்+ஆன்= ஒருபான்-
என்றாகி, ஒருபானை – ஒருபானால் – ஒருபாற்கு- ஒருபானின் – ஒருபானது –
ஒருபான்கண்- என உருபேற்கும். இங்ஙனமே இருபானை, இருபானால்….
முதலாயினவும் கொள்க. (தொ. எ. 199 நச்.)