ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்களின் (ஏழ் நீங்கலாக உள்ளவை) ஈற்றுக்
குற்றுகரம் மெய்யொடும் கெட்டு, மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி,
ஒன்று இரண்டு – என்பன ஒரு இரு – என்றாகி, மூன்றன் ஒற்று நகரமாக,
நான்கும் ஐந்தும் ஒற்றுநிலை திரியாவாகப் புணரும்.
வருமாறு : ஒரு நூறு, இரு நூறு, முந்நூறு, நானூறு, ஐந்நூறு,
அறுநூறு, எண்ணூறு. (தொ. எ. 460- 462 நச்.)