ஒன்று முதல் பத்து ஈறான எண்களுள் ஒன்பது ஒன்றும் நீங்கலான ஒன்பது
எண்ணுப்பெயர்களும் இரட்டுமாயின் (நிலைமொழி எண்ணுப்பெயரே
வருமொழியாகவும் நிகழுமாயின்), நிலைமொழியின் முதலெழுத்து நீங்கலாகப்
பிறவெல்லாம் கெடும். வருமொழி முதலில் உயிர் வருமாயின் வகரமெய்யும்,
மெய்வருமாயின் அவ்வந்த மெய்யும் இடையே மிகப்பெறும். (நிலைமொழி நெடில்
முதல் குறுகும் என்க.)
வருமாறு : ஒன்று+ ஒன்று
> ஒ + ஒன்று
> ஒ + வ் + ஒன்று =
ஒவ்வொன்று; மூன்று + மூன்று
> மு + மூன்று
> மு+ம்+மூன்று =
மும்மூன்று. பிறவும் இவ்வாறே இவ்விரண்டு, நந்நான்கு, ஐவைந்து,
அவ்வாறு, எவ் வேழு, எவ்வெட்டு, பப்பத்து – என முடியு மாறு கொள்க.
(நன். 199)