ஒன்பது என்பதன் ஒகரத்தொடு தகரம் சேர, (‘பது’ கெட) னகரம் ளகரமாகி இரட்ட, வருமொழி நூறு ‘ஆயிரம்’ ஆகத் திரியத் தொள்ளாயிரம்- என முடியும். ஒன்பது + நூறு > தொன்பது + நூறு > தொன்+ நூறு > தொள்ள் + நூறு > தொள்ள் +ஆயிரம் = தொள்ளாயிரம் (தொ. எ. 463 நச்.)