‘ஒன்பதும் இனைத்தே’

ஒன்பது என்பதன் ஈற்றுயிர்மெய்யைக் கெடாது குற்றுகர ஈற்றுப்
பொதுவிதியான் உயிர் ஒன்றுமே கெட, இன்னும் இற்றும் ஏற்பது ஏற்று
நிற்றலின் ‘ஒன்பதும் இற்றே’ எனத் தன்மையணி ஆக்காது, உவமையணி ஆக்கி
‘இனைத்தே’ என்றார். ஒன்பது என்பதன் இறுதி பத்து என்பது போல முரணி
நிற்றலின், அதனோடு இது மாட்டெறியப்பட்டது.
வருமாறு : ஒன்பது+ ஆயிரம்
> ஒன்பத் +இன் + ஆயிரம் =
ஒன்பதினாயிரம்
ஒன்பது + ஒன்று
> ஒன்பத் + இற்று + ஒன்று =
ஒன்பதிற்றொன்று (நன். 197 சங்கர.)