ஒட்டுதற்கு ஒழுகிய வழக்காவது சொற்கள் சாரியை பெறுதற்கு ஏற்ற
மொழியமைப்பாம். ஆகவே எல்லாச் சொற்களும் சாரியை பெறுதல் வேண்டும் என்ற
வரையறை இன்று. மேலும் இன்ன இன்ன சொற்கள் இன்ன இன்ன சாரியை பெறுதல்
வேண்டும் என்ற வரையறையும் உண்டு. இவ்வரை யறை சான்றோர் வழக்கும்,
சான்றோர் செய்யுளும் நோக்கிக் கொள்ளப்பட்டதாம்.
நிலா என்பது அத்துச்சாரியை பெறும் என்ற விதியை (எ. 228 நச்.),
(வருமொழி பெயராய் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி ஆகியவிடத்து) ஒட்டுதற்கு
ஒழுகிய வழக்கு அன்மையின், நிலாக்கதிர் – நிலாமுற்றம் – என்பன
பெறாவாயின. (தொ.எ. 132 நச்.)