ஒக்கூர்‌

ஓக்கூர்‌ என்பது பாண்டி நாட்டில்‌ திருக்கோட்டியூர்‌ பக்‌கத்தே உள்ள ஓரூர்‌, எக்கூர்‌ என்பதே இவ்வூர்‌ என்று கருத்தும்‌ உள்ளது. அகநானூற்றில்‌ 14 ஆம்‌ பாடலையும்‌, புறநானூற்றில்‌ 248. ஆம்‌ பாடலையும்‌ பாடிய மாசாக்கனார்‌ என்ற புலவரும்‌, குறுந்தொகையில்‌ [.6. 139, 186, 20, 275 ஆகிய பாடல்களையும்‌ அகநானூற்றில்‌ 324, 384 ஆகிய பாடல்களையும்‌, புறநானூற்றில்‌ 29 ஆம்‌ பாடலையும்‌ பாடிய மாசாத்தியார்‌ என்ற புலவரும்‌ ஒக்கூரைச்‌ சேர்ந்தவர்கள்‌.