முன்னிலை மொழிக்கண் வரும் ஒகரஈறு வன்கணம் வரின் மிக்குப் புணரும். எ-டு : ஓஒக் கொற்றா; ஓ – ‘இங்ஙனம் செய்தலை ஒழி’ என்னும் பொருளது. (தொ. எ. 272 நச்.) சிறப்புப் பொருளில் வரும் ஒகரஈறு வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : நீயோஒ கொடியை (273 நச்.)