ஒகரம் மொழியீறாதல்

ஒகரம் நகரமெய்யுடன் கூடியே ‘நொ’ என மொழியீறாம். அது வன்கணம்
வரினும் இயல்பாகப் புணர்தலே பெரும் பான்மை; மென்கணம் வரின் மெலி
மிகுதலும் ஆம்.
எ-டு : நொ கொற்றா – இது விட்டிசைத்தலின் வல்லெழுத்து
மிகாதாயிற்று.
நொந் நாகா, நொம் மாடா – என மெல்லெழுத்து மிக்கும்
நொ நாகா, நொ மாடா – என விட்டிசைத்து இயல்பாகவும் வரும்.
நச்சினார்க்கினியர் நொக் கொற்றா என வல்லெழுத்து மிகும் என்றார்.
ஓரெழுத்தொருமொழி முன்னிலை வினைச்சொல் மிக்கே முடிதல் கொள்க என்றார்
அவர். (தொ. எ. 151 நச்.)
ஓ என்ற முன்னிலை ஏவல்வினை, வருமொழி வன்கணம் வந்தவிடத்து அளபெடுத்து
வல்லெழுத்து மிக்கு முடியும்வழி, ஒகரம் நிலைமொழி யீற்றில் வரும். (272
நச்.)
எ-டு : ஓஒக் கொற்றா
சிறப்புப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் அளபெடுத்து வருமொழி
வன்கணம் வரினும் இயல்பாக முடியும். (273 நச்.)
எ-டு : யானோஒ கொடியன்