இஃது ஒன்பதாம் உயிரெழுத்து. அகரமும் இகரமும், அகரமும் யகரமும்
இதற்குப் போலியாக வருவன. இஃது அண்பல் முதலை நாவிளிம்பு உறுதலால்
பிறக்கிறது. இது விலங்கல் வளியான் தோன்றுவது என்ப.
இது, பற
வை – பறத்தலைச் செய்வது என
வினைமுதற் பொருள் விகுதியாகவும்,
தொ
டை-தொடுக்கப்படுவது எனச்
செயப்படுபொருள் விகுதியாகவும்,
பார்
வை – பார்த்தற்குக் கருவி யாவது
எனக் கருவிப்பொருள் விகுதியாகவும்,
கொ
லை – கொல்லுதலாகிய தொழில் எனத்
தொழிற்பெயர் விகுதியாகவும்,
தொல்லை – பழமைத் தன்மை எனப் பண்புப்பெயர் விகுதியாகவும்,
அவனை (ஐ) என இரண்டாம் வேற்றுமை உருபாகவும்,
சென்றனை – செல்(ன்) + ற் + அன் + ஐ என முன்னிலை ஒருமை
விகுதியாகவும்,
பண்டு – பண்டை என ஒரு சாரியையாகவும்
வியப்புப்பொருளில் வரும் உரிச்சொல்லாகவும் (‘ஐ வியப்பா கும்’ தொ.
சொ. 385 சேனா.) – எனப் பல திறமாக வருவது.
அ இ ய் – இவற்றின் சேர்க்கையால் ஐகாரம் உண்டாயிற்று என்பர் சிவஞான
முனிவர். (சூ.வி. பக். 25)