ஐ ஒளக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் மொழி முதற்கண் ஒன்றரை மாத்திரையா யும், ஏனைய
இடங்களில் ஒரு மாத்திரையாயும், ஒளகாரக் குறுக்கம் மொழி முதற்கண்
ஒன்றரை மாத்திரையாயும் குறுகும் என்பது உய்த்துணர்ந்து கொள்க. அவ்வாறு
உய்த்துணர்ந்து கொள்ளாக்கால்,
‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவார்’
(நாலடி. 39)
எனவும்,
‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்’
(குறள் 774)
எனவும்,
‘ஒளவிய நெஞ்சத்தான் ஆக்கமும்’
(குறள். 169)
எனவும் வரும் இலக்கியங்களுக்கு இலக்கணம் இன்றாய் முடியும். (நன்.
95 சிவஞா.)