கை, பை, மை, கௌ, வெள – என்பனவும் பொருளைச் சுட்டிய வழிக் குறுகும் எனக் கொள்க. இங்ஙனம் அளவு குறுகலானும், சீரும் தளையும் சிதையுமிடத்து அலகு பெறாமையானும், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் சார்பெழுத்து எனஉயிரின் வேறாயின. (இ. வி. 21 உரை)