ஐ அம் பல்என வரூஉம் அல்பெயர்

ஐ, அம், பல் – என்ற ஈறுகளையுடைய அளவுப்பெயரும் நிறைப் பெயரும்
அல்லாத எண்ணுப்பெயர்கள். ஐ: தாமரை;அம்: வெள்ளம்; பல்: ஆம்பல். தாமரை –
வெள்ளம்- ஆம்பல் – என்பன தமிழில் பேரெண்கள்.
இவை வருமொழியாக, நிலைமொழி ஏழ் என்பதுநிற்பின், இயல்பாக ஏழ்தாமரை,
ஏழ்வெள்ளம், ஏழ்ஆம்பல் – எனப் புணரும். (தொ. எ. 393 நச்.)