ஐ என்றால் அழகு. எனவே அழகிய ஊர் என்ற பொருளில் அமைந்து ஐயூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். தலைவன் என்ற பொருளும் இருப்பதால் தலைவனின் ஊர் என்ற பொருளிலும் அமைந்திருக்கலாம். ஐயூர் என்பது சோழ நாட்டகத்ததாகிய ஓரூர் எனத் தெரிகிறது. புறநானூற்றில் 21 ஆம் பாடலைப் பாடிய மூலங்கிழார் என்ற புலவரும், நற்றிணையில் 206, 334 ஆகிய பாடல்களையும், குறுந்தொகையில் 123, 206, 322 ஆகிய பாடல்களையும், அகநானூற்றில் 216 ஆம் பாடலையும், புறநானூற்றில் 5, 225, 314, 399 ஆகிய பாடல்களையும் பாடிய முடவனார் என்ற புலவரும் ஐயூரைச் சேர்ந்தவர்கள்.