‘ஐயும் மெய்யும் கெட்ட இறுதி’யும் அதன் இயலும்

இறுதி ஐயும் மெய்யும் கெட்டுச் சாரியை பெற்று உருபேற்கும் சொல்
‘யாவை’ என்பது. யாவை என்ற சொல் வற்றுச் சாரியையும் உருபும் பெற்றுப்
புணருமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரமும் ஐகாரத்தான் ஊரப்பட்ட வகர ஒற்றும்
கெட்டு யா என நின்று, யாவற்றை – யாவற்றொடு – என்றாற் போலப் புணரும்.
(தொ. எ. 183 நச்.)
இது போலவே, அவ் இவ் உவ் – என்பனவும், வற்றின்மிசை ஒற்றாக
நிலைமொழியீற்று வகரம் கெட, அ இ உ -என நின்று, வற்றும் உருபும்
பெற்றுப் புணரும்.
வருமாறு : அவ்+ வற்று + ஐ
> அ +வற்று + ஐ =
அவற்றை
அவ் +வற்று + ஒடு
> அ +வற்று + ஒடு = அவற்றொடு
(தொ. எ. 183. நச்.)