ஐயீற்றுப் பகாப்பதங்களில் ஐ ஒழித்து விகுதியாக ‘ஏயன்’ என்று முடிந்தால், ‘ஈன்ற மகன்’ என்று காட்டும் வடநடைப் பகுபதங்களாம். கார்த்திகையின் மகன் கார்த்திகேயன், கங்கையின் மகன் காங்கேயன், விநதையின் மகன் வைநதேயன்- என்று வரும் (தொ.வி. 86 உரை)