ஐந்துபொருள் சிலேடை இணைமடக்கு

முதலீரடிகளும் ஐந்து பொருள்களுக்குச் சிலேடையாய்ப் பின்னீரடிகளும்மடக்காய் அமையும் பாடல்.எ-டு : ‘சூழி மறு(கு)ஆ டவர்தோள் விரல்பொழில்தேன்ஆழி பயிலும் அரங்கமே – ஊழிதிரிநாட் டிரிநாட் டினவுயிராய்க் கொண்டஅரிநாட் டரிநாட் டகம்’‘ஊழி திரிநாள் த்ரிநாட்டின் உயிர் உயக்கொண்ட அரிநாட்டு ஹரிநாட்டுஅகம் அரங்கமே’ – ஊழி முடிவில் மூவுலக உயிர்களையும் வயிற்றில் வைத்துப்பாதுகாத்த பாற்கடல் என்னும் இடத்தையுடைய ஹரி என்னும் திருநாமம்உடையானது பதி அரங்க நகராகும். அதன்கண்,சூழி ஆழிபயிலும் – குளங்கள் வட்டமாக அமைந்திருக்கும்; மறுகு ஆழிபயிலும் – தெருக்களில் தேர்வண்டிச் சக்கரங்கள் பொருந்தும்; ஆடவர்தோள்ஆழிபயிலும் – ஆடவர்களின் வலத்தோளில் திரு ஆழி முத்திரை வைக்கப்படும்;விரல் ஆழி பயிலும் – விரலில் மோதிரம் பொருந்தும்; பொழில் தேன் ஆழிபயிலும் – சோலையிலுள்ள தேன் கடலை நோக்கிச் செல்லும் என ஐம்பொருள்சிலேடை மடக்குடன் இணைந்து வந்தவாறு. இறுதியடிகளின் முதல் இரு சீர்கள்மடக்கின. (மா. அ. பா. 758)