வருமொழியில் ஆயிரம் வரின், நிலைமொழியாகிய ஐந்து என்பதன் ஈறாகிய
துகரம் கெட, நின்ற ‘ஐந்’ என்பதன் நகர ஒற்று யகர ஒற்றாக, ஐய்+ஆயிரம் =
ஐயாயிரம் என்றாயிற்று என்பர் தொல். (தொ. எ. 468 நச்.)
‘ஐவகை அடியும்’ என்புழி, ஐகாரம் நீங்கலாக ஏனைய எழுத்துக்கள்
கெட்டுப் புணர்வது போல், ஐ+ ஆயிரம்= ஐயாயிரம் என, யகர உடம்படுமெய்
பெற்றுப் புணர்ந்தது என்பதே ஏற்றது.
ஐயீராயிரம், ஐயுணர்வு – என்பனவற்றை நோக்க, யகரம் உடம்படுமெய்
என்பதே பொருந்தும். (எ. ஆ. பக். 175)