ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்

ஐகாரம் தன்னைச் சுட்டுமளவில் குறுகாது மற்று மொழியின் முதல் இடை
கடை என்ற மூவிடங்களிலும் தன் இயல்பான இரண்டு மாத்திரையிற்
குறுகிவரும். ஒளகாரமும் மொழி முதற்கண் மாத்திரம் வருதலின் ஆண்டு
அவ்வாறு குறுகி வரும். மொழி முதற்கண் வரும் ஐகார ஒளகாரங்களின்
மாத்திரை ஒன்றரை எனவும், மொழி இடையிறுதிகளில் வரும் ஐகாரத்தின்
மாத்திரை ஒன்று எனவும் கொள்க.
எ-டு : ஐப்பசி – மைப்புறம், வலையன், குவளை, மௌவல் (நன்.
95)
ஓரெழுத்தொருமொழியாம் ஐகாரம் தனித்து வருமிடத்தும், நிலைமொழி
வருமொழியாய்த் தொடர்ந்து வருமிடத்தும் குறுகாது.