ஐகாரஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்
வல்லெழுத்து மிக்கு முடியும். இரண்டாம் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சியாயின் இயல்பாகப் புணரும்.
எ-டு : யானைக்கோடு, யானைச்செவி, யானைத்தலை, யானைப்புறம்.
இரண்டாம் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், ‘முறைகாட்டி’ – தினை
கொணர்ந் தான் – பனை பிளந்தான் – என இயல்பாகப் புணரும்
உருபேற்றவழியும் யானையைக் கொணர்ந்தான் – என்றாற் போல வல்லெழுத்து
மிகும். (தொ. எ. 280 நச்.)