ஆவிரை, பனை, தூதுணை, வழுதுணை, தில்லை, ஓலை, தாழை – முதலியன ஈற்று
ஐகாரம் கெட்டு அம்முச்சாரியை பெற்று வருமொழியொடு புணரும்; சிறுபான்மை
உருபிற்குச் சென்ற இன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண்ணும் பெறுவ
துண்டு.
வருமாறு : ஆவிரை + காய்
> ஆவிர்+ அம்+ காய்= ஆவிரங்
காய்; பனை + காய்
> பன் + அம்+ காய் = பனங்
காய்; தூதுணை + காய்
> தூதுண் + அம் + காய் =
தூதுணங்காய்; வழுதுணை + காய்
> வழுதுண்+ அம் + காய் =
வழுதுணங்காய்; தில்லை + காய்
> தில்ல் + அம் + காய் =
தில்லங் காய்; ஓலை + போழ்
>ஓல் + அம் + போழ் =
ஓலம்போழ்; தாழை + காய்
> தாழ் + அம் + காய் =
தாழங்காய் (தொ. எ. 283 நச்.)
ஈற்று ஐகாரம் கெடாமல் இன்சாரியை பெற்று, ஆவிரையின் காய் – பனையின்
காய் – துதுணையின் காய் – வழுதுணையின் காய் – தில்லையின் காய் –
ஓலையின்போழ் – தாழையின் காய் – (விசையின் கோடு – ஞெமையின் கோடு –
நமையின் கோடு) – எனவும் வரும். (தொ. எ. 283, 285 நச். உரை)