தமிழில் நாட்பெயர்கள் இகர ஐகார மகர ஈற்றன. ஐகார ஈற்று நாட்பெயர்
வருமொழியொடு புணரும்வழி ஆன்சாரியை இடையே பெறும். வன்கணம் வரின் ஆனின்
னகரம் றகரம் ஆகும்.
சித்திரை + ஆன் + கொண்டான் = சித்திரையாற் கொண்டான் – என வரும்.
சித்திரைநாளின்கண் கொண்டான் என்பது பொருள். (தொ. எ. 286, 127
நச்.)