இஃது அம்பு என்ற பொருளில் வரும் பெயர்ச்சொல்; ‘எனக்கு ஒரு கருமம்
பணி’ என்ற பொருளில் வரும் முன்னிலை ஏவல் வினைச்சொல்; தேற்றம், வினா,
பிரிநிலை, எண், ஈற்றசை, இசைநிறை, விளிக்குறிப்பு, எதிர்மறை,
இகழ்ச்சிக்குறிப்பு, இரக்கக்குறிப்பு – முதலிய பொருள்களில் வரும்
இடைச் சொல்; பெருக்கம் என்ற பொருளில் வரும் உரிச்சொல்.
ஏவினா இடைச்சொல் ஏவன், அவனே – எனமொழி முதலிலும் இறுதியிலும்
வரும்.
ஏ எம்பெருமான் – விளிக்குறிப்பு; விளியிறுதியில் வருதலே
பெரும்பான்மை.
‘ஏ எ இஃதொத்தன் நாணிலன்’
– இகழ்ச்சிக்
குறிப்பு.
‘ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார்’
– இசைநிறை.
‘ஏஎ பாவம்’ – இகழ்ச்சிக்குறிப்பு முதற்கண்ணேயே வரும்.