ஏகார ஓகார இடைச்சொற்கள் நிலைமொழி ஈற்றில் நிற்ப, வரு மொழி முதற்கண் வன்கணம் வரினும் இயல்பாகப்புணரும். எ-டு : ‘யானே கள்வன்’; ‘யானோ தேறேன்’ (குறுந்.21) (நன். 201)