ஏ என்பது அம்பு என்ற பொருளில் வரும் பெயராக, வல்லெழுத்து முதலாகிய
வருமொழியொடு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், ‘எனக்கு ஒரு கருமம்
பணி’ என்ற பொருளில் ஒருமை ஏவல்வினைமுற்றாக, வல்லெழுத்து முதலாகிய
வருமொழியொடு விளிப்பொருளில் வரும் அல் வழிப்புணர்ச்சிக்கண்ணும் அளபெடை
எகரமும் வல்லெழுத் தும் பெறும்.
எ-டு : ஏ+ கொட்டில் = ஏஎக் கொட்டில் – வேற்றுமை
ஏ+கொற்றா = ஏஎக் கொற்றா – அல்வழி
சிறுபான்மை ஏப்புழை, ஏஞாயில் என்றாற் போல அளபெடை எழுத்துப் பெறாது
வருதலுண்டு. (தொ. எ. 277, 272 நச். உரை)
ஏகார இடைச்சொல் மொழி ஈறாகியவழித் தேற்றப் பொரு ளில் வரும் ஏகாரம்
மாத்திரம் எகரம் பெற்றும், ஏனைய அது பெறாமலும் இயல்பாக வருமொழியொடு
புணரும்.
எ-டு : ‘யானேஎ கள்வன்’ – தேற்ற ஏகாரம் (273 நச்.)
மொழி முதற்கண் இகழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு –
இவற்றின்கண் வரும் ஏகாரம் எகரம் பெறுதலும், இசைநிறை ஏகாரம் அடுக்கி
வருதலும், ஏனைய பொருளில் வரும் இறுதி ஏகாரங்கள் இயல்பாக வருதலும்
கொள்ளப்படும்.