உரிஞ், மண், துன் – முதலியவற்றை எடுத்து உச்சரித்து பெயரை
வருவித்து ஏவல் வினையாக்கி உகரம் பெறுமாறு காண்க. (உரிஞ்- உராய், மண்
– கழுவு, துன் – நெருங்கு)
எ.டு: உரிஞு கொற்றா, சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மாடா,
வளவா, என மூவின மெய் வருவழியும் உகரம் பெற்றவாறு.
‘நனி’ என்றதனால், மணலை வாரு, சருகை வாரு- என ரகரம் ஏவற்கண் உகரம்
அரிதின் பெறும். (நன். 206 மயிலை. உரை)