செய் என்பது ஏவல். அதனொடு பிறவினை விகுதியாகிய வி, பி – இவற்றில்
ஏற்றதொன்று இணையின் ஈரேவலாம். மீண்டும் பிவ்விகுதி இணையின் மூவேவலாம்.
அஃதாவது செய்யென்ற ஏவல்மேல் ஏவலும், ஈரேவலும் ஆம்.
எ-டு : செய் – செய்வி – செய்விப்பி; உண் – உண்பி – உண்பிப்பி;
வா – வருவி – வருவிப்பி (நன். 138)