ஈர் தீர் மின் மினீர் – விகுதி பன்மை ஏவலாம்.
ஈர் – உரையீர் கேளீர், தீர் – போதீர் அருள்தீர், மின்- உரைமின்
கேண்மின், மினீர்- உரைமினீர் கேண்மினீர் – என்று வரும்.
அன்றி, குவ்விகுதி ஒருமைக்கும் பன்மைக்கும் ஆகும்.
‘அன்னையே அனையார்க் கிவ்வா றடுத்தவாறு அருளுகு என்றான்’
(
கம்பரா.
I
: 9 : 16)
‘நீ இங்கு இருக்கு என் றேகி’
(சிலப். 24)
‘ஏற்றியல் காண்டும் நாம் இவண் தருகு என்னவே’
(சீவக. 1837)
என்பவற்றில் அருளுகு, இருக்கு, தருகு – என்பன ஒருமைக்கு ஏவலாம்.
மீளவும், ‘
எந்தைமார்கள் எழுகு என்றான்’
(சீவக.) என்பதனுள் எழுகு பன்மைக்கு ஏவலாம். (பாட்டடி நிகழிடம்
தெரிந்திலது.)
ஒரோவழி இவ்விகுதி வியங்கோள் வினைக்கும் ஆம்.
‘ஆயிர மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண் டாகு என்று ஏயினன்’
(கம்பரா.
I
: 9 : 21)
‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்குஎன வாழ்த்தி’
(சிலப். 5:73, 74)
என்பவற்றில் உண்டாகு, சுரக்கு – என்பன உண்டாக, சுரக்க – என
வியங்கோளாய் வந்தவாறு காண்க.
அன்றியும், வரல் தரல் – என்னும் சொல், வாராய் தாராய் – வருதி தருதி
– என்றும், வாரீர் தாரீர் வருதீர் தருதீர் – என்றும், வம்மின் தம்மின்
வம்மினீர் தம்மினீர் – என்றும் வருதலும் அறிக. (தொ. வி. 113 உரை)