ஆயிரத்துக்குக் கீழுள்ள எண்ணுப்பெயர்களுள் ஏழ் என ழகர ஈறாக வரும்
எண்ணுப்பெயர்கள் தவிர, ஏனைய யாவும் குற்றியலுகர ஈற்றனவாம்.ஏழ்
என்பதொன்றே மெய்யீற்று எண்ணுப்பெயராம். ஆயினும் ஏழ் என்பது, ஒன்று
முதலிய ஏனைய எண்ணுப்பெயர்களைப் போல, உருபேற்குமிடத்துத்
தொல்காப்பியனாரது காலத்தே அன்சாரியை பெற்று உருபேற்றது; பிற்காலத்தே
இன்சாரியை பெற்று உருபேற்கும்.
வருமாறு : ஏழனை, ஏழனொடு, ஏழற்கு;ஏழினை, ஏழி னொடு, ஏழிற்கு (தொ.
எ. 194 நச்.)