ஏழுசீரால் வந்த கழிநெடிலடி ஏழ்வகை

1 எழுசீர் மத்த கோகில விருத்தம் (குறில்ஈற்றுத் தேமா கூவிளம் ஆகியசீர்கள் மூன்று முறை வரப்பெற்று, இறுதியில் நெடிலீற்றுக் கூவிளம்அமையப் பெறுவது),2. சுகந்தி விருத்தம் (நேரசையில் தொடங்குவது, நிரையசை யில்தொடங்குவது),3. மானினி விருத்தம், 4. கவிராச விராசித விருத்தம், 5. சாத்துவிவிருத்தம், 6. மணிமாலாவிருத்தம் (நேரசையில் தொடங்கு வது, நிரையசையில்தொடங்குவது), 7. புளிமாவும் கருவிள மும் மும்முறை அடுக்கி வரஇறுதியில் நீண்ட கருவிளம் வரும் எழுசீரடிகள் நான்கான் ஆகியதும்,இத்தகைய பாட லில் இறுதிச்சீர் தேமா ஆகியதும் எனப்படும் வகை என்பனவாம்.(வி. பா. பக். 68 – 72)