தன்னன் என்பவன் ஏழில் குன்றத்திலிருந்து ஆட்சி புரிந்ததாகச் சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. இப்பொழுது மலையாள நாட்டில் ஏழுமலை [Elumala] என்று வழங்கப் பெறும் இடமே அந்த ஏழிற் குன்றம். தற்காலத்திய வட மலபாரைச் சேர்ந்த ஏமில் மலை, கொண் கானம், பூமிநாடு ஆகியவை அடங்கிய பகுதியே நன்னன் ஆட்டக் குட்பட்டிருந்த நாட்டின் பகுதியாகக் கருதப் பெறுகிறது. ஏழில் ஒருமலை. இது நன்னன் என்பவனுக்குரியது. ஏழிலை பாலையென்னும் மரமும் ஆம் என்பர் உ.வே. சாமிநாதையர், இக்குன்றத்தையடுத்த காடுகளில்இயற்கையாகவே ஏழிலைப் பாலை என்ற மரம் வளர்வதைத்தான் நேரில் சென்ற பொழுது பார்த்ததாகவும், ஆகவே அம்மரத்தின் பெயரால் ‘ஏமில்’ என அக்குன்று சங்க காலத்தில் பெயர் பெற்றது எனக் கருதுவது சரியே என்றும் கூறப்படுகிறது. காஞ்சி என்பது காஞ்சி என்ற மரப்பெயராலும் வஞ்சி என்பது வஞ்சி என்ற மரப்பெயராலும் கொற்கை என்பது கொற்கு என்ற மரப்பெயராலும் பெயர் பெற்றமையை ஒப்புமையாகக் கூறப்படுகிறது.ஏழில் மரம் கேரளச் சடங்குகளில் இன்றும் மிகமுக்கிய இடம் பெற்றுள்ளது. கிராம மக்களின் தெய்வ வழிபாட்டில் இம்மரம் இடம் பெற்றுள்ளது. பகவதி தேவதையின் மரம் என்று கருதப்படுகிறது. பகவதி கோயில் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள அம்மரத்தில் பெரிய ஆணிகள் அடிக்கின்றனர். இவ்வாறெல்லாம் அப்பகுதி மக்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய மரம் ஏழில். யாழ் போன்று தோற்றம் பெற்றதால் ஏழில் எனப் பெயர் பெற்றது என்ற அவ்வை துரைசாமி அவர்களின் கருத்துப் பொருத்தமற்றது என்றும், இசையொலியைக் குறிக்கும் எழால் என்ற சொல்லோடு இயைபுபடுத்திக் கூறினாரோ என்றும் P.L, சாமி கூறுறொர். தான் நேரில் சென்று பார்த்த பொழுது யாழ் வடிவுத் தோற்றமே இல்லை என்பதை அறிந்ததாகவும் கூறுகிறார். எனவே ஏழில் என்பது மரப்பெயரால் பெற்ற ஊர்ப்பெயரென்று தெரிகிறது.
“பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின்
யாரோ பிரிகிற்பவரே” (நற் 391: 6 8) “
எம்மில் அயலது ஏழில் ௨ம்பர்” (குறுந். 138 : 2)
“ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில்
களி மயிற் கலாவத்தன்ன தோளே”. (அகம். 152.: 13 14)
“இன்சனி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலைஇறந் தோரே” (௸ 173 : 16 18)
“நுணங்கு நுண் பனுவற்புலவன் பாடிய
இளமழை தவமும் ஏழிற் குன்றத்து” (ஷே. 345: 6 7)
“அருங் குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு,
ஏழிற்குன்றத்துக் கவாஅன்…” (௸ 349 : 7 9)