அறுவகை இலக்கணம் இயற்றிய தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்டபிறிதோர் இலக்கணநூல் இது. இஃது அறுவகை இலக்கணத்திற்குப் புறனடையாகஅமைந்துள் ளது. முதற்கண் பாயிரம் பற்றிய செய்யுள்கள் ஏழும், இறுதியில் யாப்பியல்பு பற்றிய நூற்பாக்கள் பதினாறும் இந்நூலுள்காணப்படுகின்றன.வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் என்னும் இவற்றின் தளையிடையேசிறுபான்மை வண்ணத்தில் ‘தய்ய தன்னவே தன’ ஆம். வெண்டளை பிழையாக் கலிபுரவலர் குலம்; விருத்தம் வணிகச் சாதி; மூன்றசைச்சீர்க் கொச்சகக்கலிப்பா வேளாண் சாதி; பதம், சிந்து ஆதிய பாணர் சாதி; தூநிலை வண்ணம்கற்புடைமகள்; எதுகை மோனைகள் அளவின்றி யும் பிழைபடவும் பாடுதல் பீடுஅழிமகள்; பழமை குறையுள தேல் களைக; புதுமை நிறைவுளதேல் கொள்க. இவைஇந்நூலிற் காணும் விசேடச் செய்திகள்.