ஏழாம் வேற்றுமையுருபு தொக்க தொகையில் நிலைமொழிப் பெயர் வருமொழி
வினையொடு புணருமிடத்துப் பொதுவிதி யால் ஐகார இறுதி வன்கணம் வந்தவழி
வல்லெழுத்து மிகா மலும், மகர ஈறு துவரக் கெட்டு வல்லெழுத்து மிகாமலும்
இயல்பாக முடியும்.
எ-டு : ‘வரைபாய் (வருடை)’, ‘புலம்புக்கனனே புல்லணல் காளை’ (புற.
258) (தொ. எ. 157 நச்.)