ஏரகம் அல்லது திரு ஏரகம் என்பது முருகனது படை, வீடுகளில் ஒன்று. வீடு என்னும் பொருள்படும் அகம் என்ற சொல் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கிறது. முதலில் வீட்டைக் குறித்த அகம் என்ற சொல் நாளடைவில் வீடுகளையுடைய ஊரைக் குறித்தது போலும். சோழ நாட்டில் தஞ்சையையடுக்த சுவாமி மலையே ஏரகம் என்பர். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கருத்து அது தவது என்பது. திநமுருகாற்றுப்படையில் ஏரகத்தைப் பற்றிக் கூறப்படும் குறிப்புகளின் அடிப்படையிலும், நச்சினார்க்கினியா் உரையைக் கொண்டும் ஏரகம் என்பது சுவாமி மலையின் வேறாகிய ஓர் ஊர் எனக் கருத இடமளிக்கிறது. ஏரகத்து முருகன் கோயிலில் நாற்பத்தெட்டு ஆண்டு பிரம சரிய விரதம் காத்த வேதியர் மந்திரங்கள் கூற. ஈர உடையணிந்த அருச்சகர் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தைக் கூறி அருச்சனை செய்தனர் என்று திருமுருகாற்றுப்படை. கூறுகிறது. தென் கன்னட மாவட்டத்தில் புத்தரர் வட்டத்தில் கிழக்கே அமைத்துள்ள மேற்கு மலைத்தொடரின் மேற்கு பக்கத்து மலைப் பகுதியைச் சேர்ந்த துளு நாட்டில் குமாரக்ஷேத்திரம் அல்லது சுப்பிரமண்ய க்ஷேத்திரம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது. இங்கே உள்ள கோயிலில் முருகனுக்கு நடைபெறும் பூசைகளின்போது அருச்சகர் நீராடி ஈர ஆடையுடன் இருந்தே அருச்சனை புரிதல் வழக்கம், அவரும் அவருடடைய உதவியாளரும் நீராடிய பின்பே ஈர ஆடையுடன் கருவறையுள் நுழைவர். உதவியாளர் மந்திரங்களைக் கூற அருச்சகர் அருச்சனை புரிவர், (ஸ்ரீசுப்பிர மணிய க்ஷேத்திரம், ஆங்கில நூல் பக். 5 8) ஏரகத்து முருகன் கோயிலைப் பற்றித் திருமுருகாற்றுப் படை கூறும் செய்தியையும், ‘ஏரகம் மலை நாட்டகத் தொரு திருப்பதி’ எனக் கூறும் நச்சினார்க்கினியரின் கூற்றையும் கொண்டு, துளுநாட்டைச் சேர்ந்த குமார ஷேத்திரமே திருமுருகாற்றுப்படை குறிக்கும் ஏரகம் என்று கருத வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.மந்திரம் ஓதுவோரையும் அருச்சகரையும் தனித்தனியாகப் பெற்ற வேழிமலை (நாகர் கோயிலுக்கு அண்மையிலுள்ள வேள் மலை) யை ஏரகம் எனக் கூறுவோரும் உண்டு. இன்று கோயிலில் நடை பெறும் நடை முறையை வைத்துக் கொண்டு அன்றைய நிகழ்ச்சியோடு தொடர்பு: படுத்தி முடிவு செய்ய இயலுமா என்பதை ஆராய்ந்து முடிவு காண வேண்டும். ஈர ஆடையுடன் ஒருவர் மந்திரம் கூற, மற்றொருவர் அருச்சனை புரிதல் சாதாரண நடை முறையாக இருக்கலாகாதா? ஓதுவார் பாடல் ஓத, அருச்சகர் அருச்சிக்கும் வழக்கும் இன்றும் பலமுருகன் கோயில்களில் நடை முறையில் இருப்பதைக் காணலாம். ஏர் என்றால் அழகு. அகம் என்றால் இடம். அழகிய சோலைகள் நிறைந்த பகுதி என்ற பொருளில் இப்பெயர் “ஏரகம்” என அமைந்திருக்கவும் வாய்ப்புண்டு போலும். அறுபடை வீடுகளுள் பிற எல்லாம் மலைப்பகுதிகளாய் அமைந்தமை,போன்று இதுவும் சிறந்த மலைப்பகுதி என்ற நிலையில் அழகிய சோலைகள் நிறைந்த இடமாக அமைய வாய்ப்புண்டு. அழகுணர்ச்சி மிக்க. தமிழர்கள் அழகிய ஊர்ப் பகுதியை ஏரகம் எனப்பெயரிட்டமைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது. வடமொழியில் ஏரகம் என்றால் கோரைப்புல் என்று பொருளாம். கோரைப்புல் மிகுந்த பகுதி ஏரகம் என்று பெயா் பெற்றிருக்கலாம் என்றும் கருதலாம். இக்கருத்து ஆய்தற்குரியது. காஞ்சி மரங்கள் நிறைந்த இடம் காஞ்சி என்றும், காரைச் செடிகள் நிறைந்த இடம் காரைக் காடு என்றும் வழங்கும் நிலையும் ஒப்பு நோக்கத்தக்கது.
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி,
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய, அறன் நவில் கொள்கை,
மூன்று வகைக் குறித்த முக்தீச் செல்வத்து
இரு பிறப்பாளர், பொழுது அறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண்,
புலராக் காழகம் புலர, உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து,
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப் பாடி,
விரை உறு நறுமலர் ஏந்தி பெரிது உவந்து,
ஏரகத்து உறைதலும் உரியன்’” (பத்துப். திருமுருகு. 177 189)
“சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே” (சிலப். 24; 8: 1)