ஏமப்பேறூர்

வையம் புரக்கும் தனிச்செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும் செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்டிசையும் ஏறூர் ஏமப் பேறூரால்
என்ற சேக்கிழார் பாடல் (பெரிய.33-1) சோழநாட்டு, மிகவும் செழிப்பு, மிக்கதொரு ஊர் எனக் காட்டுகின்றது இச்செழிப்பு மக்கள் வாழ்க்கையைச் சீரியதாக இருக்கச் செய்த நிலையில் இது ஏமப்பேறூர் எனத்திகழ்ந்திருத்தல் திண்ணம். இன்பம் தரும் சிறப்புபெற்ற ஊர் என்ற நிலையில் இவ்வூர் பொருள் அமைகிறது. நம்பியாண்டாரின் திருத்தொண்டத் தொகை இவ்வூரை எழில் ஏமப்பேறூர்’ ( 31 ) எனக் குறிக். கின்றது.