வகரத்தை ஈறாக உடைய சொற்கள் அவ் இவ் உவ் தெவ்- என நான்காம். முதலன
மூன்றும் சுட்டுப்பெயர்களாம். ஏனை வகர ஈற்றுச் சொல்லாகிய தெவ் என்பது
உரிச்சொல்லாம். அது படுத்தல் ஓசையான் பெயராம். அது பெயராகியவழி இன்
சாரியை பெற்று உருபேற்றுத் தெவ்வினை – தெவ்வினொடு- தெவ்விற்கு-
என்றாற் போலப் புணரும். (தொ.எ. 184. நச்.)
அஃது அல்வழி வேற்றுமை என்ற இருவழியும் தொழிற்பெயர் இயல்பிற்றாய்
வருமொழி வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்துப்பேறும், மென்கணத்தும்
இயல்புகணத்து வகரத்தும் உகரப் பேறும், யகரம் வருவழி இயல்பும், உயிர்
வருவழி ஒற்றிரட்டுதலும் எய்திப் புணரும். மகர முதல்மொழி வருவழி, தெவ்
என்பதன் ஈற்று வகரஒற்று மகரஒற்றாகத் திரிந்து புணர்தலுமுண்டு.
எ-டு :
அல்வழி வேற்றுமை
தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை
தெவ்வு நன்று தெவ்வு நன்மை
தெவ்வு வலிது தெவ்வு வலிமை
தெவ் யாது தெவ்யாப்பு
தெவ்வரிது தெவ்வருமை
(வகரம் உடம்படுமெய்)
தெம்மாண்டது,
தெவ்வு மாண்டது அல்வழி
தெம்மாட்சி, தெவ்வு மாட்சி வேற்றுமை
(தொ. எ. 382 நச். உரை)