ஏனை ‘ஒத்த காட்சியின்’ இயறல்

எழுத்தொலிக்கு வரையறுக்கப்பட்டநிலைக்களமாகிய தலை – மிடறு – நெஞ்சு
– என்ற மூன்றனுள், வல்லினம், தலைவளி யானும், உயிரும் இடைக்கணமும்
மிடற்றுவளியானும் பிறத் தலின், எஞ்சிய நெஞ்சுவளியான்ஆய்தம் பிறக்கும்
என்பது இத்தொடரின் கருத்தாக நச். கூறுவார். இ.வி. ஆசிரியரும்
இக்கருத்தைப் பின்பற்றிக் கூறியுள்ளார். (தொ. எ. 101. நச்.)