மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை சுவாதி விசாகம் என்றஏழ்நாளும் ஆசிரியப்பாவிற்கு உரியன.அநுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்தராடம், திரு வோணம், அவிட்டம்என்ற ஏழ்நாளும் கலிப்பாவிற்கு உரியன.சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி, அசுவினி பரணி என்ற ஆறுநாளும் வஞ்சிப்பாவிற்குரியன.வெண்பா நீங்கலான மூன்றுபாவும் ஏனைய எனப்பட்டன. அவ்வெண்பாவுக்குநாள் உரிமையினைத் தனித்தலைப்பிற் காண்க. (கார்த்திகை……..ஆயிலியம்) (இ. வி. பாட். 121)