ஏந்திசை இருபது

குறில் அகவல் ஏந்திசை வண்ணம், நெடில் அகவல் ஏந்திசை வண்ணம், வலிஅகவல் ஏந்திசை வண்ணம், மெலி அகவல் ஏந்திசை வண்ணம், இடை அகவல் ஏந்திசைவண்ணம் – என அகவல் ஏந்திசை வண்ணம் ஆவன – 5.எ-டு : ‘களவினாற் கொணர்ந்தவெண் காணமும் விழுப்பொன்னும்உளவெனினும் யான்துய்ப்பல் உலவாது கிடந்தமையால்வளையினாற் பொலிந்தகை வாட்கண்ணாள் வழிப்படூஉம்களைவாரின் கனையிருட்கண் காணேன்மற் றிதுவல்லால்.’என இது போன்ற தரவு கொச்சகங்களும், தும்பிப் பாட்டும் அகவல் ஏந்திசைவண்ணத்தன.குறில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், வலிஒழுகல் ஏந்திசை வண்ணம், மெலி ஒழுகல் ஏந்திசை வண்ணம், இடை ஒழுகல்ஏந்திசை வண்ணம் – என ஒழுகல் ஏந்திசை வண்ணம் ஆவன – 5எ-டு : ‘வரையென மாடங்கள் ஓங்குறு வீதியின் வஞ்சி மன்னவன்புரைபுரை நின்றலர் பூந்தொடை யற்பொறை யன்தான் அருளானேல்கரையெனக் காலையும் காண்பரிய கடல்போலும் கௌவையும்அரையின மேகலை ஓட ஓடுமிவள் ஆவிஆற்றாதே’என இன்ன ஆசிரியத்துறை, விருத்தங்கள், வெண்பாக்கள்,வெள்ளொத்தாழிசைகள் எல்லாம் ஒழுகல் ஏந்திசை வண்ணத்தன.குறில் வல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் வல்லிசை ஏந்திசை வண்ணம்,வலி வல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி வல்லிசை ஏந்திசை வண்ணம், இடைவல்லிசை ஏந்திசை வண்ணம் – என வல்லிசை ஏந்திசை வண்ணம் ஆவன – 5எ-டு : ‘பறைபட் டனபட் டனசங் கினொலிமுறைவிட் டனவிட் டனமுன் னுலவாத்திறைவிட் டனர்கொட் டினர்திண் கலிமாநிறைகொட் டினரொட் டினர்நீள் முழவால்’இத்தகைய ஓசையுடையன வல்லிசை ஏந்திசை வண்ணத்தன.குறில் மெல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் மெல்லிசை ஏந்திசை வண்ணம்,வலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், இடைமெல்லிசை ஏந்திசை வண்ணம் – என மெல்லிசை ஏந்திசை வண்ணம் ஆவன – 5எ-டு : ‘மான்வீடு போழ்திற் பிணையின்னுயிர் போவ தேபோல்யான்வீடு போழ்தின் இதுவேகொனி னக்கும் என்னத்தேனூறும் இன்சொல் மடவாய்!அழு தாற்ற கில்லாய்வானூடு போய வரைகாணிய சென்ற காலை’இத்தகைய (கலிநிலைத்துறை) ஓசையுடையன மெல்லிசை ஏந்திசை வண்ணத்தன.‘உழவர்ஓதை மதகோதை’ (சிலப். 7-4) போல்வனவும் அன்ன.இவ்வண்ணங்கள்தாம் மதயானை நடந்தாற்போலவும், பாம்பு பணைத்தாற்போலவும், ஓங்கிப் பறக்கும் புள்போலவும் வருமெனக் கொள்க. (யா. வி. பக்.412, 413, 416 – 418)