ஒன்றிய வஞ்சித்தளையான் வரும் ஒசை.எ-டு : ‘பார்பரவிய படுவரைத்தாய்க்கார்கவினிய கதழொளியாய்நீர்மல்கிய நீள்மலரவாய்…………………’‘வளவயலிடைக் களவயின்மகிழ்வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்மனைச்சிலம்பிய மணமுரசொலிவயற்கம்பலைக் கயலார்ப்பவும்’முதற்பாடற் பகுதியுள், முதலடிக்கண்ணும் இரண்டாமடிக் கண்ணும்சீர்களிடையே ஏந்திசைத் தூங்கல் வந்தது; இரண்டாம் பாடற் பகுதியுள்முழுதும் ஏந்திசைத் தூங்கல் வந்தது. (யா. க. 90 உரை)