ஏந்தல் வண்ணம்

ஒரு முறை சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்யும்சந்தம். ஏந்தல் – ஒரு சொல்லே மிகுதல்.எ-டு : ‘கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படாகூடலுட் கூடலே கூடலும் – கூடல்அரும்பிய முல்லை அரும்பவிழ் மாலைப்பிரிவிற் பிரிவே பிரிவு.’முன்னடிகளில் கூடல் என்ற சொல்லும், ஈற்றடியில் ‘பிரிவு’ என்றசொல்லும் ஏந்தல் வண்ணம் உண்டாக்கியவாறு. (தொ. செய். 231 நச்.)