ஏது நுதலிய முதுமொழி

நுண்ணிய பொருளுடைமையும், எழுத்தானும் சொல்லானும் பொருளுடைமையும்,எல்லாச் சமயத்தாரானும் கூறும் பொருள்களில் தான் சென்று விளங்குதல்உடைமையும், அறிவோர்க்குப் பிரவேசிக்க எளிதாதல் உடைமையும் எனப்படும்இந்நான்கும் தோன்ற, எப்பொருளும் தன்னகத்து அடங்கத் தான் மேற்பட்டுப்பிரதிக்கினை மாத்திரத்தான் கருதிய பொருளை முற்றுவிக்க வேண்டுவனவற்றைஉட் கொண்டு வாராநிற்கும் ஏதுப்பொருளைக் கருதியனவே முதுமொழிச்செய்யுளாம்.பிரதிக்கினை – கருதுதல். இவற்றில் விகற்பம் அளவைநூல் முகத்தான்அறியப்படும். அளவையும் பொருட்கூறாகலான் அளவைநூல் பற்றிய இச்செய்திதொல்காப்பியப் பொருட் படலத்தில் கூறப்பட்டுள்ளது.பிரதிக்கினை -கருதுதல் – இம்மலையில் நெருப்பு உண் டென்பது;ஏது – புகை உண்மையான்,திட்டாந்தம் – அடுக்களை போல.உபநயம் – எங்குப் புகையுண்டோ அங்கு நெருப்புண்டு;நிகமனம் – இம்மலையிலும் புகையிருப்பதால் இதன்கண் நெருப்பு உண்மைஉறுதி என முடிவு செய்வது. (இ. வி. பாட். 145 உரை)கூரியதாய்ச் சுருங்கி விழுமியதாய் எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்தபொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருள்முடித்தற்குக் காரணமாகிய பொரு ளினைக் கருதுவது (ஆகிய) முதுமொழி என்பர்புலவர்.எ-டு : ‘உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்கழுதை செவியரிந் தற்றால் – வழுதியைக்கண்டன கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்கொண்டன மன்னோ பசப்பு.’ (பழமொழி)கண்டகண் இருப்பத் தோள் பசந்தன என ஒன்றன் வினைப் பயனை ஒன்றுநுகர்ந்தது என்புழிக் குறித்த பொருள் இயை பின்று எனினும்,எடுத்துக்காட்டிய ‘உழுத……………… அற்றால்’ என்ற உவமைஇயைபுடைமையினை விளக்கியவாறு காண்க. (தொ. பொ. 489 பேரா. உரை)