யவனர் சேரி என்ற தொடர் நாளடைவில் ஏணிச் சேரி எனத் திரிந்து அமைந்திருக்கலாம். தலைநகராகிய. உறையூரை யடுத்து யவனர்கள் தங்க இருந்த பகுதியாகக் கருகுலாம். மூடமோசியார் என்ற சங்ககாலப் புலவர் இவ்வூரினர். ஆகவே ஏணிச்சேரி முடமோசியார் எனப் பெற்றார். ஏணிச்சேரி உறையூரை ஒட்டி இருந்ததாக வேண்டும். மதுரை மாநகரின் புறஞ்சேரி போல உறையூர் ஏணிச்சேரி அமைந்திருந்ததாகக் கருத வேண்டும். உறையூரின் ஏணிச்சேரி என்று கூறப் பெற்றமையால் இது தெளிவாகிறது. புறநானூற்றில் 13, 127 135, 241, 374, 375 ஆகிய பாடல்கள் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியவை.