ஏடகம்

இன்று திருவேடகம் என்று சுட்டப்பட்டு வரும் இவ்வூர் மதுரை மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்த புனல் வாதத்தில் அவர் வைகையில் இட்ட வாழ்க அந்தணர் என்னும் தேவாரப் பதிகம் எழுதிய ஏடு நீரை எதிர்த்துச் செல்ல, நாயனார் வன்னியும் மத்தமும் என்ற திருப்பதிகம் பாடியவுடன் அவ்வேடு ஒதுங்கி நின்ற தலம். இதனால் ஊரின் பெயர் ஏடகம் ஆயிற்று, என்னும் கருத்து இவ்வூர் பற்றி அமைகிறது. திருஞானசம்பந்தரே தம் தேவாரத்தில்.
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி
வைகை நேர் ஏடு சென்று அணைதரும்
ஏடகத்து ஒருவன் எனக் குறிப்பிடுகின் றார்.
வைகையின் வடகரையில் உள்ள தலம் இது.