சொல்லணியுள் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய நான்கடியும் மடக்காய்வருவது. ஓரடியே நான்கடியும் மடக்கி வருவது.எ-டு : ‘வான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயின’வானம் கம் தரும் இசைய ஆயின; வானகம் தரு மிசைய ஆயின; வானகம் தரும்இசைய ஆயின; தரு மிசைய ஆயின வான் நகம்- எனப் பிரித்து,மேகம் கடலிடத்துக் கொடுக்கும் ஓசையொடு கூடியிருந்தன; அவைஆகாயத்தை வவ்விக் கொள்ளும் எழுச்சியை உடைய வாயின; விண்உலகத்தை ஒக்கும்புகழையுடையன. மரங்களை உச்சியிலே யுடையன பெரிய மலைகள் என்று பொருள்செய்யப்படும். (தண்டி. 95 உரை)ஞானசம்பந்தர் அருளிய திருப்பிரமாபுரம் ( தே. 1 – 127) பதிகம் 12பாடலும் ஏகபாதம் பயின்றவை.